எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரா நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. சக்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகி ட்ரெண்டானது. ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமில்ல, வைர் லெஸ்ஸும் ஆபத்துதான் எனும் வசனம் அம்சமாக அமைந்தது. 

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது இந்த படம். படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி தெரியவரும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் விஷால் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளார் விஷால். சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான ட்ரைலரின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியானது. 

சக்ரா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். சக்ரா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. லாக்டவுனுக்கு பிறகு துவங்கப்பட்ட இதன் படப்பிடிப்பில் முக்கிய காட்சிகளை படமாக்கினர். விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பையும் விஷால் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் படத்தின் முன்னோட்டத்திற்கு படக்குழு ஏற்பாடு செய்ததாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு முன்னதாக விஷால் நடித்த இரும்புத்திரை படத்திற்கும் ப்ரீவியூ காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மிகுந்த ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். மேலும் சக்ரா படத்தின் புதிய புகைப்படங்களும் வெளியாகி புரட்சி தளபதி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 

இந்த படத்தை தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஷால். ஒன்பது வருடங்களுக்கு பிறகு விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கவுள்ளனர். விஷால் 30 மற்றும் ஆர்யா 32 ஆன இந்த படத்தை வினோத் தயாரிக்கிறார். விரைவில் படம் குறித்த அப்டேட்டும், நடிகர்கள் விவரமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆர்யா வில்லனாக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. விஷால் கைவசம் துப்பறிவாளன் 2 திரைப்படமும் உள்ளது.