விண்ணைத்தாண்டி வருவாயா 2 ! த்ரிஷா ?
By Sakthi Priyan | Galatta | October 22, 2018 16:07 PM IST
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த படமாகும்.
மனதை வருடம் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில், சிம்பு மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த இப்படம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா காதல் காவியமாக அமைந்தது.
சிம்பு நடிப்பில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் வெற்றியை ருசித்த பிறகு கௌதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கபோவதாக கூறினார்.
அதில் நடிகர் மாதவனை முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருந்ததாக சில செய்திகள் வெளிவந்தது. பிறகு சிம்புவை வைத்தே துவங்கவுள்ளதாகவும் சில செய்திகள் கசிந்தன.
தற்போது கௌதம் மேனன்-சிம்பு-ஏ.ஆர்.ரஹ்மான் இந்த கூட்டணி மீண்டும் இணைவதால் ஒரு வேலை இது விண்ணைதாண்டி வருவாயாவின் இரண்டாம் பாகமாக இருக்குமா என்ற ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த காம்போவில் த்ரிஷாவும் இருப்பாரா என்ற கேள்வியும் எழும்பியது. வெகு நாட்களுக்கு பிறகு 96 படத்தில் ஜானு என்ற கேரக்டரில் அனைவரது மனதிலும் இடம்பிடித்த த்ரிஷாவை மீண்டும் ஜெஸ்ஸியாக பார்க்க ஆசைபடுகிறார்கள் சினிமா ரசிகர்கள்.