இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் இயக்குனர் பிரபுதேவாவின் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த படம் வில்லு. தளபதி விஜய்யுடன் இப்படத்தில் வடிவேலு, நயன்தாரா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். 

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான டாடி மம்மி வீட்டில் இல்ல என்ற பாடல் மிகவும் பேசப்பட்டு வந்தது. இதை பாடலாசிரியர் விவேகா எழுதியிருப்பார்.

Villu Movie Song Daddy Mummy Lyricist Vivega Recent Sarcastic Tweet

தற்போது விவேகா தனது ட்விட்டர் பக்கத்தில், நான் இந்தப் பாட்ட எழுதி 9-வருஷம் ஆகுது.இதோட 3 முறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் இப்பாடலை விமர்சித்து பேட்டி கொடுத்திருக்கார். ஒரு பாடலாசிரியராக ரசிகர்களின் உளவியல் அறிவேன். அமைச்சர் இப்பாடலின் மிகத்தீவிர ரசிகர் என்று ட்வீட்டை பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பதிலளிக்கும் வகையில் பதிவு செய்திருக்கிறார்.