"தளபதி விஜய் ரசிகர்களுக்காக..!"- லியோ பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸா வெளியிட்ட அட்டகாசமான SPECIAL BTS GLIMPSE இதோ!

மனோஜ் பரமஹம்ஸா வெளியிட்ட லியோ பட SPECIAL BTS GLIMPSE,dop manoj paramahamsa shared bts photos from thalapathy vijay in leo movie | Galatta

கிட்டத்தட்ட கடந்த ஓராண்டுக்கு மேலாக தளபதி 67, தளபதி 67 எனத் தொடர்ந்து அப்டேட் கேட்க தொடங்கிய தளபதி விஜய் ரசிகர்கள் டைட்டில் அறிவிக்கப்பட்ட பிறகு லியோ அப்டேட் லியோ அப்டேட் என இடைவிடாது ஆர்வத்தை கொட்டி தீர்க்க கடந்த சில தினங்களுக்கு முன்பு லியோ திரைப்படம் ரிலீஸ் ஆனது. இருப்பினும் தொடர்ந்து ஆர்வத்தோடு இருக்கும் ரசிகர்கள் கேட்டதற்காக லியோ திரைப்படத்தின் SPECIAL BTS GLIMPSE-களை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா வெளியிட்டு இருக்கிறார். எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக மிரட்டலான அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக, தளபதி விஜயின் லியோ திரைப்படம் உலகமெங்கும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. 

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் வந்திருக்கும் இந்த லியோ திரைப்படம் இதுவரை இந்திய சினிமா ரசிகர்கள் பார்த்திராத விஷுவல் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா - தளபதி விஜய் கூட்டணி லியோ திரைப்படத்தில் இணைந்து இருக்கிறது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

ஏற்கனவே பல்வேறு இடங்களில் பேசிய போது மாஸ்டர் படம் மாதிரி இந்த படம் 50% தளபதி படம் 50% லோகேஷ் படம் என்று இல்லாமல் முழுக்க முழுக்க 100% லோகேஷ் படம் என தெரிவித்தது போலவே இந்த லியோ திரைப்படம் வழக்கமான தளபதி விஜயின் விஷயங்களில் இருந்து விலகியே நகர்ந்து செல்கிறது. அதேபோல் தனது வழக்கமான ஆக்சன் விஷயங்களைத் தாண்டி இந்த லியோ திரைப்படத்தில் CG-ல் புதிய உச்சத்தை தொட்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கழுதைப்புலி உடனான சண்டைக் காட்சியில் ரசிகர்களை இருக்கை நுனிக்கு வர வைத்திருக்கிறார்.  மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார்.

ரிலீசுக்கு முன்பிருந்தே ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டிய நிலையில் லியோ திரைப்படம் முதல் நாளிலேயே 148 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் அதிகபட்ச வசூல் செய்த இந்திய படம் என்ற என்ற மாபெரும் வசூல் சாதனையை படைத்திருக்கிறது. இந்த நிலையில் தளபதி விஜய் ரசிகர்கள் கேட்டதற்காக அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அவர்கள் காஷ்மீர் படப்பிடிப்பில் தளபதி விஜய் அவர்கள் உடன் இணைந்து பணியாற்றிய போது எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இதோ...

For all the thalapthy @actorvijay sir fans who asked for bts stills of #leo… here you go @Dir_Lokesh pic.twitter.com/uT7c5w4I4p

— manoj paramahamsa (@manojdft) October 22, 2023