"இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில்..!"- அப்பாவான குக் வித் கோமாளி புகழ் பகிர்ந்த ஸ்வீட்டான செய்தி! வைரல் புகைப்படம் இதோ

பெண் குழந்தைக்கு அப்பாவான குக் வித் கோமாளி புகழ்,Vijay tv pugazh blessed with baby girl | Galatta

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நகைச்சுவையில் கலக்கி மக்களின் மனதை வென்ற புகழ் தற்போது அப்பா ஆகியிருக்கிறார். தமிழ் சின்னத்திரை உலகில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக அட்டகாசமான நிகழ்ச்சிகளை வழங்கி மக்களின் ஃபேவரட் டிவி சேனலாக திகழும் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளின் மீது ரசிகர்களுக்கு எவ்வளவு ஆர்வம் உண்டோ அதேபோல் விஜய் டிவியின் நட்சத்திரங்களின் மீதும் ரசிகர்களுக்கு தனி கவனம் உண்டு. அந்த வகையில் சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன், கவின் உட்பட தற்போது தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் பல நட்சத்திரங்கள் விஜய் டிவியில் இருந்து வந்தவர்களே. அந்த வகையில் தற்போதைய ட்ரெண்டில் விஜய் டிவி என்று சொன்னால் மக்கள் நினைவுக்கு வரும் பல முகங்களில் மிக முக்கியமான ஒரு முகம் புகழ்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் நுழைந்த புகழ் தனக்கென தனி பாணியில் தனது உடல் மொழியாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களை சிரிக்க வைப்பவர். ஆரம்ப கட்டத்தில் அதிகமாக பெண் வேடமிட்டு நடித்த புகழ் தனக்கு கிடைத்த பாத்திரம் என்ன என்பதை பற்றி கவனத்தில் கொள்ளாமல் கிடைத்த பாத்திரத்தை எப்படி மக்கள் ரசிக்கும்படி செய்து சிரிக்க வைக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி அதில் முத்திரை பதித்தார். தொடர்ந்து கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் காமெடியில் கலக்கிய புகழின் சின்னத்திரை பயணத்தில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. ரசிகர்களின் ஆல் டைம் பேவரட் காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கும் இந்த குக் வித் கோமாளின் நிகழ்ச்சியின் மூலம் புகழுக்கு கிடைத்த புகழ் அவரை வெள்ளித்திரைக்கு கைப்பிடித்து அழைத்துச் சென்றது. 

அந்த வகையில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்த சிக்ஸர் திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்த புகழ் தொடர்ந்து சாரு ஹாசன் அவர்கள் நடித்த தாதா 87, இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கைதி, யோகி பாபுவின் காக்டெய்ல் உள்ளிட்ட திரைப்படங்களை சிறு சிறு வேடங்களில் நடித்தார். பின்னர் சந்தானத்தின் சபாபதி, அஸ்வின் கதாநாயகனாக அறிமுகமான என்ன சொல்லப் போகிறாய், அஜித் குமாரின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விசேஷம், அருண் விஜயின் யானை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் DSP, சசிகுமாரின் அயோத்தி, கௌதம் கார்த்திக்கின் ஆகஸ்ட் 16 1947, காஜல் அகர்வாலின் கருங்காப்பியம், மிர்ச்சி சிவா & யோகி பாபுவின் காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் புகழ் நடித்தார். இதனிடையே தற்போது கதாநாயகனாகவும் களமிறங்கும் நடிகர் புகழ் மிஸ்டர் ஜு கிப்பர் எனும் அட்டகாசமான ஃபேண்டஸி காமெடி படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். விரைவில் இந்த திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு தனது காதலி பென்சி ரியாவை புகழ் திருமணம் செய்து கொண்டார் இதனை அடுத்து பென்சில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த புகழ் வளைகாப்பு புகைப்படங்களையும் மெட்ர்னிட்டி போட்டோ ஷூட் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று செப்டம்பர் 27ஆம் தேதி புகழ் - பென்சி தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. மகளை பெற்றெடுத்த விஜய் டிவி புகழுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்நிலையில் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்ல மகளின் பிஞ்சு பாதங்களின் புகைப்படத்தை வெளியிட்டு, “இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்… மகள் அல்ல எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள்… தாயும் சேயும் நலம்!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். விஜய் டிவி புகழின் அந்தப் பதிவும் புகைப்படமும் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)