"Mr லியோதாஸ் Is a BADASS!"- சர்ப்ரைஸாக வந்த தளபதி விஜயின் லியோ பட 2வது பாடல் GLIMPSE இதோ!

தளபதி விஜயின் லியோ பட 2வது பாடல் GLIMPSE வெளியீடு,thalapathy vijay in leo movie second single badass glimpse out now | Galatta

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் காத்திருக்கும் தளபதி விஜயின் லியோ படத்தின் இரண்டாவது பாடலாக வெளிவர இருக்கும் BADASS பாடலின் முன்னோட்டமாக புதிய வீடியோ ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் அடுத்ததாக தனது 68 ஆவது படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தளபதி 68 திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் லியோ திரைப்படத்தின் ரிலீஸ்க்கு பிறகு படப்பிடிப்பு மற்றும் இதர அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தளபதி விஜயின் திரை பயணத்திலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை லியோ திரைப்படம் ஏற்படுத்தியிருக்கிறது. முதல் அறிவிப்பு வருவதற்கு முன்பிருந்தே லியோ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக கிளம்பியதற்கு பல காரணங்களும் உண்டு

விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதாலும் மாஸ்டர் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்து இருக்கிறது என்பதாலும் லியோ திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலில் எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. மேலும் இந்த முறை 100 சதவீதம் லோகேஷ் படமாக இருக்கும் என தெரிவித்ததும் LCU போன்ற இதர சில விஷயங்களும் லியோ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க, தளபதி விஜய் உடன் மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு த்ரிஷா கதாநாயகியாக நடிப்பதும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிப்பதும் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை கூட்டியது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. முன்னதாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதிகப்படியான டிக்கெட் கோரிக்கைகள் எழுவதாலும் போலி டிக்கெட்டுகள் குறித்த பல செய்திகள் வெளி வந்ததாலும் பாதுகாப்பு காரணம் கருதி படக்குழு இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்தனால் என்ன ரசிகர்களை உற்சாகப்படுத்த மற்றொரு சர்ப்ரைஸ் இருக்கிறது என லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பை நேற்று படக்குழு அறிவித்தது. அதன்படி இன்று செப்டம்பர் 28ஆம் தேதி மாலை லியோ படத்தின் இரண்டாவது பாடலாக BADASS பாடல் வெளிவருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த பாடலின் முன்னோட்டமாக புதிய GLIMPSE வீடியோ ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது அட்டகாசமான அந்த வீடியோ இதோ…