தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாக, பலகோடி தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் சேனலாக திகழும் விஜய் தொலைக்காட்சி தொடர்நது பல வித்தியாசமான நிகழ்ச்சிகளின் மூலம் பல சேனல்களுக்கு முன்னோடியாகவும் விளங்கி வருகிறது.குறிப்பாக ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே விஜய் டிவி மீது ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கும் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கலக்கப் போவது யாரு, KPY சாம்பியன்ஸ், அது இது எது, குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் என எண்ணற்ற நகைச்சுவை நிகழ்ச்சிகள் உள்ளன.

இதில் விஜய் டிவியில் முன்னணி நகைச்சுவை ஜாம்பவான்களில் ஒருவர் திவாகர். கலக்கப்போவது யாரு, KPY சாம்பியன்ஸ் மற்றும் அது இது எது என அனைத்து நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் பலகுரல் மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடி என நகைச்சுவையில் கலக்கி ரசிகர்களை மகிழ்விப்பது திவாகரின் வழக்கம். தொடர்ந்து வெள்ளித்திரையிலும்  திரைப்படங்களில் திவாகர் நடித்து வருகிறார். 

மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா மெகா தொடரில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் திவாகர். இந்நிலையில் ஸ்டாண்ட் அப் காமடியனான விஜய் டிவி KPY திவாகரின் தாயார் திடீரென காலமானார். KPY திவாகரின் தாயார் மறைவுக்கு சின்னத்திரையை சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.