மக்களின் மனம் கவர்ந்த நடிகராக, மக்கள் செல்வனாக திகழ்பவர் விஜய் சேதுபதி. இந்திய திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவரான இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர், தெலுங்கில் உப்பெனா உள்ளிட்ட படங்கள் வசூல் சாதனை செய்ததோடு அதிக பாராட்டுகளையும் குவித்தன. எதார்த்தமானா நடிப்பு, இயல்பான பேச்சு, ஹீரோ என்றாலும், வில்லன் என்றாலும் தனக்குரிய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடிப்பது இவருடைய ஸ்டைல். 

இவரது நடிப்புக்கு மேலும் மகுடன் சூட்டும் விதமாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை மத்திய அரசு அறிவித்து இவரை மேலும் கௌரவப்படுத்தி உள்ளது.

விரைவில் மறைந்த இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் லாபம் திரைப்படம் வெளியாகவுள்ளது. தற்போது, மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைக்கர் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதன் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் செம ஸ்மார்ட்டாக இருக்கும் விஜய் சேதுபதியை ரசித்து, ட்ரெண்ட் செய்து வருகின்றனர் திரை ரசிகர்கள். க்ளீன் ஷேவ்வில், ஃபார்மல்ஸ் ஆடையில் சும்மா அள்ளுது சேது என கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள். 

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். படத்தின் நாயகியாக காயத்ரி நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் தட்டிப்புட்டா பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

இது தவிர்த்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல், பொன்ராம் இயக்கி வரும் VJS 46, பாலிவுட்டில் மும்பைகர் போன்ற படங்களும் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது.