நாளை வெளியாகிறது விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் Second Look !
By Aravind Selvam | Galatta | February 20, 2019 18:52 PM IST
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார்.
சமந்தா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.வேலைக்காரன் படத்தில் நடித்த மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ரம்யா கிருஷ்ணன்,காயத்ரி,மிருணாளினி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் Second Look போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் First Look வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
#SuperDeluxe Second look poster from tomorrow! #SuperDeluxe2ndLookFromTomorrow@itisthatis @ynotxworld @VijaySethuOffl @Samanthaprabhu2 #FahadhFaasil @thisisysr @meramyakrishnan #Mysskin @sash041075@alchemyvisionw1 @gopiprasannaa pic.twitter.com/Ix29fWVpyf
— Gopi Prasannaa (@gopiprasannaa) February 20, 2019
இந்த திடீர் அறிவிப்பால் விஜய்சேதுபதி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.