தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ் செய்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி . அப்படி அவர் நடிப்பில் இன்னும் ஒரு சில படங்கள் திரைக்கு வர உள்ளன குறிப்பாக சூப்பர் டிலக்ஸ் , துக்ளக் , சிந்துபாத் போன்ற முக்கியமான படங்களும் அதில் அடங்கும்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் மாமனிதன் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது என படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் காயத்ரி,அனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இது விஜய்சேதுபதி , சீனு ராமசாமி இருவரும் இணையும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னதாக தென்மேற்கு பருவக்காற்று,இடம் பொருள் ஏவல் ,தர்மதுரை உள்ளிட்ட படங்களில் பண்ணியாற்றியுள்ளனர்.மாமனிதன் படத்திற்கு இளையராஜா ,யுவன் ஷங்கர் ராஜா,கார்த்திக் ராஜா மூவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து ரிலீசுக்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.