தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மொழியை தாண்டி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி திரையுலகங்களிலும் கலக்கி வருகிறார்.  மேலும் காந்தி டாக்ஸ் எனும் மௌன திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் VJS46 ஆகியப்படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்தடுத்து கடைசி விவசாயி, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்களும் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த திரைப்படம் மாமனிதன். கதாநாயகியாக காயத்ரி நடிக்க குரு சோமசுந்தரம், ஷாஜி சென், ஜுவல் மேரி, அனிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.YSR  புரோடக்சன் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மாமனிதன் படத்தை தயாரித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா , யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா இணைந்து இசையமைத்துள்ள மாமனிதன் படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். விரைவில் திரைக்கு வர உள்ள மாமனிதன் படத்தின் அசத்தலான டீசர் இன்று வெளியானது. அந்த டீசர் இதோ…