தமிழ் திரையுலகில் இன்றியமையாத கதாநாயகனாக உயர்ந்து இருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் வரும் மாதத்தில் மட்டும் விஜய் சேதுபதியின் மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.முன்னதாக மறைந்த இயக்குனர் S.P.ஜனநாதன் இயக்கிய கடைசி திரைப்படமாக லாபம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர்ந்து இயக்குனர் தீபக் சௌந்தரராஜன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிகை டாப்ஸியும் இணைந்து நடித்திருக்கும் அனபெல் சேதுபதி திரைப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ரிலீசாகிறது. அடுத்ததாக விஜய்சேதுபதியின் அரசியல் திரைப்படமாக வெளிவருகிறது துக்ளக் தர்பார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் S.S.லலித் குமார் தயாரிப்பில் இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இயக்குனர் பார்த்திபனும் இணைந்து நடித்திருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படம் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. விஜய் சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் தர்பார் படத்தின் அதிரடியான டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டிரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.