திரை உலகில் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் தனி தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கும். ஆனால் தமிழ் சினிமாவில் அனேக  ரசிகர்களின் அபிமான நட்சத்திரமாக திகழ்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. பல விதமான கதாபாத்திரங்களில் எதார்த்தமாக ரசிகர்களின் மனதை கவரும் விஜய்சேதுபதியின் திரைப்படங்கள் வரும் வாரங்களில் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.

முன்னதாக மறைந்த இயக்குனர் S.P.ஜனநாதன் இயக்கிய கடைசி திரைப்படமாக தயாராகியிருக்கும் லாபம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் இயக்குனர் தீபக் சௌந்தரராஜன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிகை டாப்ஸியும் இணைந்து நடித்திருக்கும் அனபெல் சேதுபதி திரைப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ரிலீசாகிறது.

இதனைத் தொடர்ந்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் S.S.லலித் குமார் தயாரிப்பில் இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இயக்குனர் பார்த்திபனும் இணைந்து நடித்திருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படம் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

விஜய் சேதுபதியுடன் இணைந்து சத்யராஜ், மஞ்சிமா மோகன், காயத்ரி, ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்நிலையில் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ இன்று வெளியானது. அதிரடியான அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.