தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக தனது கதாபாத்திரங்களிலும் சிறந்த நடிப்பிலும் மக்களின் மனதை கொள்ளையடிக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில்  வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது கடைசி விவசாயி திரைப்படம். மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் கடைசி விவசாயி திரைப்படத்தை காக்கா முட்டை & ஆண்டவன் கட்டளை படங்களின் இயக்குனர் மணிகண்டன் இயக்கியுள்ளார்.

தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் மாமனிதன், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படம், காந்தி டாக்ஸ் என்னும் மௌன படம்  மற்றும் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் இயக்கத்தின் புதிய வெப் சீரிஸ் என அடுத்தடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீஸாகி ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா என மூவரும் முன்னணி கதாபாத்திரங்களில்  நடிக்க, இளையதிலகம் பிரபு, ரெட்டின் கிங்ஸ்லீ, இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும் நடன இயக்குனர் கலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக இப்படத்தில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் மொஹமது மொபி எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி புதிய போஸ்டர் தற்போது வெளியானது. அந்த போஸ்டர் இதோ…