மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் படத்தின் First Look கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி படங்களை இயக்கிய அருண் குமார் இயக்குகிறார்.அஞ்சலி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

K Productions தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தின் டீஸர் இன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது.தற்போது அந்த டீஸர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது