தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா.அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகராக மாறினார்,குறிப்பாக பெண்களின் மனம் கவர்ந்த கனவு கண்ணனாக மாறினார் விஜய் தேவர்கொண்டா.பெண்கள் மட்டுமின்றி பல இளைஞர்களின் மனதிலும் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.

இதனை தொடர்ந்து இவர் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் படங்களின் வெற்றி மூலம் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.அடுத்ததாக இவர் பூரி ஜெகன்னாத் இயக்கியுள்ள Liger படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் 25 2022-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா மீண்டும் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து JGM என்ற படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படத்தின் அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.

இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் விஜய் தேவர்கொண்டா தற்போது இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் விஜய் தேவர்கொண்டா.இந்த சந்தோசத்தை சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.