தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் என்டர்டெய்னிங் திரைப்படங்களில் ஒன்றான சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. சென்னை 600028 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து வெளிவந்த சரோஜா மற்றும் கோவா படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதனையடுத்து தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பை பெற்ற இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா படம் மெகா ஹிட்டானது. முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன்.T.R நடித்து வெளிவந்த மாநாடு திரைப்படமும் ஏகோபித்த வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனிடையே இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த மன்மதலீலை திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

வழக்கம்போல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த மன்மத லீலை திரைப்படம் விரைவில் பிரபல OTT தளமான aha Tamil தளத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி முதல் aha தளத்தில் ஒளிபரப்பாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் மன்மதலீலை படத்தின் புதிய ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ட்ரைலர் இதோ…