இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக தயாராகியுள்ள மஹா திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்ததாக இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் ஃபேண்டசி ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகும் புதிய திரைபடத்திலும், இயக்குனர் விஜய் சந்தர் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
 
இதனிடையே உலக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 மினிட்ஸ், தெலுங்கில் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள மை நேம் இஸ் ஸ்ருதி, ஹன்சிகா மற்றும் நடிகர் ஆதி இணைந்து நடித்திருக்கும் பார்ட்னர் மற்றும் ரவுடி பேபி ஆகிய படங்களும் அடுத்தடுத்து ஹன்சிகா நடிப்பில் ரிலீஸாக தயாராகி வருகின்றன. 

இந்த வரிசையில் அடுத்ததாக வெப்சீரிஸில் களமிறங்கியுள்ள ஹன்சிகா இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் MY3 எனும் புதிய வெப்சீரிஸில் நடித்துள்ளார். ட்ரெண்ட் லௌட் டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள MY3-A Robotic Love Story வெப்சீரிஸில் ஹன்சிகா வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரோபோவாக நடித்துள்ளார் என தெரிகிறது. 

நேரடியாக டிஸ்கிப்லஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் விரைவில் ரிலீசாக இருக்கும் MY3-A Robotic Love Story வெப்சீரிஸில் ஹன்சிகா மோட்வானிவுடன் இணைந்து பிக் பாஸ் முகேன் ராவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, சாந்தனு பாக்யராஜ், ஜனனி ஐயர், ஆஷ்னா சாவேரி, சுப்பு பஞ்சு, அணிஷ் குருவில்லா, லட்சுமிநாராயணன், KPY ராமர், Tiger தங்கதுரை, அபிஷேக் மற்றும் VJ பார்வதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில் கணேசன்.S இசையமைத்துள்ள MY3-A Robotic Love Story வெப் சீரிஸின் டைட்டிலை அறிமுகம் செய்யும் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் MY3 வெப் சீரிஸின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.  படப்பிடிப்பு நிறைவடைவதை முன்னிட்டு படக்குழுவினருக்கு ஹன்சிகா இனிப்புகள் வழங்கி அன்பை பரிமாறி உள்ளார். இந்நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ…