‘என் ரோஜா நீயே..’ விஜய் தேவரகொண்டா பிறந்தநாளையொட்டி படக்குழு வெளியிட்ட அட்டகாசமான First single.. – ரசிகர்களால் வைரலாகும் பாடல் இதோ..

குஷி படத்தின் அட்டகாசமான முதல் பாடல் வெளியானது - Kushi movie First single out now | Galatta

தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. திரைத்துறையில் அடியெடுத்து வைத்த சில காலத்திலே மிகப்பெரிய அளவு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ்,ம் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் விஜய் தேவரகொண்டாவிற்கு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இவரது முந்தைய படமான லைகர் பான் இந்தியதிரைப்படமாக வெளியாகியது. ஆனால் படம் நினைத்த வரவேற்பை அவருக்கு கொடுக்கவில்லை.  தற்போது விஜய் தேவரகொண்டா ‘குஷி’ என்ற படத்திலும் மற்றும் இயக்குனர் கௌதம் தின்னானூரி இயக்கும் ‘VD12’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் விஜய் தேவரகொண்டா அவருக்கும் #HappybirthdayAnna என்ற ஹேஷ்டேக்குடன் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே விஜய் தேவரகொண்டா, சமந்தா இணைந்து நடித்து வரும் ‘குஷி’ படத்தின் முதல் பாடலை இன்று விஜய் தேவரகொண்டா அவரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் சிவா நிர்வாணா இயக்கத்தில் காதல் கதையாக உருவாகி வரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே படப்பிடிப்பை தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடு மற்றும் சில சிக்கல்களால் படம் பாதியிலே நிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த படம் இந்த ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. காதல் கதையை மையமாக உருவான குஷி படத்திற்கு ஒளிப்பதிவாளர் முரளி ஒளிப்பதிவு செய்ய பிரவின் புடி படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

With full love ❤️
Our 1st song from #Kushi https://t.co/5fz4UVbsIJ pic.twitter.com/9c536r2bSN

— Vijay Deverakonda (@TheDeverakonda) May 9, 2023

இப்படத்தின் அறிவிப்பிலிருந்தே இப்படத்திற்கான தனி எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் குஷி படத்தின் முதல் பாடல் தற்போது தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகின்றது. இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் இசையில் தமிழில் ‘என் ரோஜா நீயே’ என்ற பாடலை கார்க்கி எழுதியுள்ளார். இயக்குனர் மணிரத்னம் படங்களின் டைட்டில்களான கீதாஞ்சலி, அஞ்சலி, ரோஜா, உயிரே, காற்று வெளியிடை, ஒகே கண்மணி என்று சேர்த்து பாடல் வரிகளை எழுதியுள்ளார் பாடலாசிரியர் இந்த கூடுதல் சிறப்புடன் தற்போது ரசிகர்கர்களால் இப்பாடல் வைரலாகி வருகின்றது. சிறப்பான பிறந்த நாள் பரிசாக இந்த பாடல் அமைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

 

அட்டகாசமான பரிசு கொடுத்து சர்ப்ரைஸ் செய்த தங்கர் பச்சான்.. ஆச்சர்யத்தில் உறைந்த லோகேஷ் கனகராஜ்.. - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

அட்டகாசமான பரிசு கொடுத்து சர்ப்ரைஸ் செய்த தங்கர் பச்சான்.. ஆச்சர்யத்தில் உறைந்த லோகேஷ் கனகராஜ்.. - வைரலாகும் வீடியோ இதோ..

வேகமெடுக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூல் வேட்டை.. உற்சாகத்தில் ரசிகர்கள் - முதல் பாகத்தை முந்தியதா?.. விவரம் இதோ..
சினிமா

வேகமெடுக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூல் வேட்டை.. உற்சாகத்தில் ரசிகர்கள் - முதல் பாகத்தை முந்தியதா?.. விவரம் இதோ..

Super deluxe இயக்குனரின் அடுத்த படைப்பு... தமிழில் மீண்டும் ஒரு ஆந்தாலாஜி - இணையத்தில் வைரலாகும் அப்டேட்... விவரம் இதோ..
சினிமா

Super deluxe இயக்குனரின் அடுத்த படைப்பு... தமிழில் மீண்டும் ஒரு ஆந்தாலாஜி - இணையத்தில் வைரலாகும் அப்டேட்... விவரம் இதோ..