மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இயக்குனராக பெரிய வரவேற்பை பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.இதனை அடுத்து இவர் கார்த்தி நடித்த கைதி படத்தினை இயக்கினார்.இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடிக்க வளர்ந்து வரும் முக்கிய இயக்குனர்கள் லிஸ்டில் இணைந்தார் லோகேஷ்.

தனது மூன்றாவது படத்தில் தளபதி விஜயை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் லோகேஷ்.

ஹாட்ட்ரிக் வெற்றியுடன் உலகநாயகனின் விக்ரம் படத்தினை அடுத்து இயக்கினார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி,பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிக்க படம் மிகப்பெரிய வசூலை செய்தது.இந்த படத்தினை அடுத்து இவர் மீண்டும் விஜயுடன் அடுத்த படத்தில் இணையவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.

இதனை தவிர விக்ரம் படத்தில் தனக்கென ஒரு யுனிவர்ஸ் உருவாக்கி பல படங்களை உருவாக்கும் வாய்ப்பினை பெற்றார்.இதன்மூலம் அடுத்து கைதி 2,விக்ரம் 2 உள்ளிட்ட படங்கள் தயாராக உள்ளன.விருமன் பட ப்ரோமோஷனில் விறுவிறுப்பாக கலந்துகொள்ளும் கார்த்தி,கைதி 2 படம் லோகேஷ் விஜயின் தளபதி 67 நிறைவுக்கு பின் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.