“என் முகத்துல 9 பிளேட் வெச்சிருக்காங்க..” படப்பிடிப்பில் எப்படி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விஜய் ஆண்டனி.. – Exclusive Interview இதோ...

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து விஜய் ஆண்டனி பகிர்ந்த தகவல் - Vijay antony about Major Accident in pichaikkaaran | Galatta

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்ற நடிகராக வெற்றி திரைப்படங்களுடன் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இசையினால் ரசிகர்களை வைப் செய்ய வைத்த விஜய் ஆண்டனி தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகராகவும் தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உருவாகும் பிச்சைக்காரன் 2  திரைப்படம் வரும் மே 19 ம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த பிச்சைகாரன் திரைப்படத்தின் அடுத்த பாகத்தை தன் தயாரிப்பில் தானே நடித்து இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.

பிச்சைக்காரன் 2  ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளியாகவிருக்கும் நிலையில் விஜய் ஆண்டனி நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பிச்சைக்காரன் 2 திரைப்படம் குறித்தும் மற்றும் அவர் கடந்து வந்த பாதைகள் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் சமீபத்தில் விஜய் ஆண்டனிக்கு பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது மிகப்பெரிய விபத்து நேரிட்டது. இதிலிருந்து மீண்டு வந்த தருணம் மற்றும் விபத்து நிகழ்ந்த தருணம் குறித்து கேட்ட போது, அவர்  

“மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றது. கடலில் ஜெட்ஸ்கி படகில் நானும் ஹீரோயினும் போறோம். இன்னொரு படகின் மூலம் எங்கள படப்பிடிக்குறாங்க.. பயங்கர வேகத்துல ஜெட்ஸ்கி ஓட்டிட்டு போறேன். கேமிரா இருக்கும் படகு ஒட்டி போனா கேமிராவிற்கு நல்ல விஷூவல் கிடைக்கும்னு போறேன்.. முதல் ரௌண்ட் நல்லா கொடுத்துட்டேன். சரி இருந்தாலும் இன்னொரு ரௌண்ட் போலாம் இன்னும் நல்லா கிடைக்கும் னு பார்த்தோம். அதனால் இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம்னு பக்கத்துல போலாம்னு பார்த்தோம். சரியாதான் போயிட்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் அலை உயரம் தூக்கிட்டு இருந்ததா னு தெரியல.. படகு கட்டுப்பாடு இல்லாம போய் நேரா எதிர்ல இருந்த படகு மேல போய் மோதிட்டேன்.  மோதுனதுல முகத்துல அடிச்சு மூக்கு உள்ள போயிடுச்சு..‌  தாடை விழுந்துடுச்சு..  அப்படியே தண்ணில விழுந்து உள்ள போயிட்டேன்.. அப்பறம் என்னை காப்பாத்தி மருத்துவமனை கூப்டு போனாங்க..ஒருநாள் கழிச்சு முழிச்சு பார்த்தேன்.. நான் சாதாரணமா இருக்கும் னு நினைச்சேன். அப்பறம் கண்ணாடி பார்க்கும் போதுதான் தெரியும் என்ன நிலைமை னு... இப்போ கூட பேசும் போது கொஞ்சம் இடையூறு இருக்கு.. முகத்துல 9 பிளேட் வெச்சிருக்காங்க.. அதெல்லாம் ஒன்னும் இல்ல..‌ மனசு ரொம்ப நல்லா இருக்கு...

விபத்து நடந்தது பின் எல்லாமே எனக்கு நல்லதா நடக்குது..‌இது ஒண்ணுமில்ல உடம்பு தானே.. பிரச்சனை இல்லை பார்த்துக்கலாம்.. நான் ஜீரோலருந்து வந்திருக்கேன்.. எல்லாமே பார்த்துட்டேன் அதனால் புதுசா வர பிரச்சனை எதுவும் தெரியாது.  இதுக்கு மேல் இழக்கறதுக்கும் ஒண்ணும் இல்ல.. நான் எல்லாம் சாதாரணமா எடுத்துட்டேன்.. அவ்வளவு தான்.” என்றார் விஜய் ஆண்டனி.

மேலும் விஜய் ஆண்டனி அவர்கள் மே 19 வெளியாகவிருக்கும் பிச்சைக்காரன் படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் அடங்கிய முழு வீடியோ இதோ..

 

“இளம் தலைமுறையினரை பார்த்து கவலை கொள்கிறேன்..” AI குறித்து ஏ ஆர் ரஹ்மான் கருத்து – இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“இளம் தலைமுறையினரை பார்த்து கவலை கொள்கிறேன்..” AI குறித்து ஏ ஆர் ரஹ்மான் கருத்து – இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..

 “விவசாயிகளுக்கு ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 1ரூபாய்..” மாஸ் காட்டிய விஷால் – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“விவசாயிகளுக்கு ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 1ரூபாய்..” மாஸ் காட்டிய விஷால் – வைரலாகும் வீடியோ இதோ..

சினிமா

"Controversy லாம் வரனும் அப்போதான்.." ஃபர்ஹானா படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் - முழு வீடியோ இதோ..