தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அறம்,கோலமாவு கோகிலா என ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஐரா திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.இந்நிலையில் நயன்தாரா புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார் என நம்பத்தக்க வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவு இயக்குவார் என்றும் ,இந்த படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பாளராக அறிமுகம் ஆக உள்ளார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள்,படத்தின் ஷட்டிங் தேதி உள்ளிட்டவை குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.