“நானும் ரௌடி தான் படத்தில் அந்த காட்சியின் போது இதுதான் நடந்தது..” விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ.

Lip Close அ இருக்க காட்சி குறித்து விக்னேஷ் சிவன் பகிர்ந்த தகவல் – Vignesh shivan about Naanum rowdy than proposal scene making | Galatta

தமிழ் சினிமாவில் வித்யாசமான கதைக்களத்தில் நேர்த்தியான தொழில்நுட்ப கலையுடன் வெளியாகி மக்களின் ஏகோபத்ய வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘நானும் ரௌடிதான்’ இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015ல் வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர் ஜே பாலாஜி, பார்த்திபன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார். அட்டகாசமான டார்க் காமெடி திரைப்படமாக உருவாகி ரசிகர்களில் மிகப்பெரிய ஆதரவை பெற்ற இப்படத்தினை மக்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் இருந்து தான் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் காதல் மலர்ந்து கடந்த ஆண்டு திருமணத்தில் முடிந்தது. தற்போது அந்த தம்பதியினருக்கு அழகான இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவர்கள் நானும் ரௌடி தான் படம் குறித்தும் நயன்தாரா வுடன் காதல் மலர்ந்த தருணம் குறித்தும் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்த ‘கேம் செஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் நானும் ரௌடிதான் படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய காட்சி குறித்து அவர் பேசுகையில்,

“நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதியும் நயன்தாராவும் கிட்ட வந்து உதடு நெருங்க பேசுறா மாதிரி ஒரு காட்சி இருக்கும். அப்போதான் எங்களுக்குள்ள காதல் வளர்ந்து வந்த காலம். அந்த தருணத்தில்  உரிமை கொண்டாடும் உணர்வு வந்திருந்தால் இரண்டு பேர் உதடுகளுக்கும் இடைவெளி அதிகரித்திருக்கும்..  அந்த காட்சி நல்லா வந்திருக்காது.‌ அந்த நேரத்தில் இரண்டு பேரும் தொழில் ரீதியாக நேர்மையா இருந்தோம். என்னை பொறுத்தவரை நம் வேலை சரியா நடக்கனும் ன்றது தான். அப்போ கூட அவங்க கேரவன் கூட போனதில்லை..

படம் பண்ணிட்டு இருக்கும் போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் வந்தது. அப்போதே நாங்கள் டேட்டிங் செய்தோம். செட்டில் நான் அவங்களை தொடர்ந்து 'மேம்' என்று தான் அழைத்து வந்தேன்.  அந்த உறவு அந்த படத்தை கெடுத்திட கூடாது என்பதற்காக நான் அதை செய்தேன். நேற்று வரை கதாநாயகி இன்று முதல் காதலி என்று நிறைய காட்சிகளை ஆண் புத்தி மாற்ற முயற்சிக்கும். ஆனால் நான் அதை செய்ய வேண்டாம் என்று நினைத்தேன்." என்றார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

மேலும் இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..

 

சென்சாரை முடித்து களமிறங்கும் பொன்னியின் செல்வன்.. ரன்னிங் டைம் விவரங்களுடன் மெலும் தகவல் இதோ...
சினிமா

சென்சாரை முடித்து களமிறங்கும் பொன்னியின் செல்வன்.. ரன்னிங் டைம் விவரங்களுடன் மெலும் தகவல் இதோ...

உருவாகிறது KGF 3… அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. அட்டகாசமான வீடியோ இதோ..
சினிமா

உருவாகிறது KGF 3… அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.. – உற்சாகத்தில் ரசிகர்கள்.. அட்டகாசமான வீடியோ இதோ..

ரசிகர்களின் ஆரவாரத்துடன் மேடையை அதிர வைத்த ராகவா லாரன்ஸ்... அட்டகாசமான வீடியோ உள்ளே..
சினிமா

ரசிகர்களின் ஆரவாரத்துடன் மேடையை அதிர வைத்த ராகவா லாரன்ஸ்... அட்டகாசமான வீடியோ உள்ளே..