ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா மற்றும் யாமி கவுதம் நடித்த படம் விக்கி டோனார். ஷூஜித் சிர்கார் இயக்கிய இந்த படம் ஹிந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் பாடல்கள் மற்றும் காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு வருகிறது.

Vicky Donor Tamil Remake DhaaralaPrabhu Gets A New Update

இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளனர். தாராளப்பிரபு என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் வெளியான யுத்தம் சரணம் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்குகிறார். 2012-ம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததால், தமிழிலும் நல்ல வரவேற்பை பெரும் என்று கூறலாம். இதை screen scene நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்தது.

Vicky Donor Tamil Remake DhaaralaPrabhu Gets A New Update

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், சின்ன கலைவானர் விவேக் இந்த படத்தில் டாக்டர் வேடத்தில் நடிக்கிறாராம். ஹிந்தியில் அன்னு குமார் ஏற்று நடித்த பாத்திரத்தில் விவேக்கை காண காத்திருக்கின்றனர் ரசிகர்கள். படத்தின் சில காட்சிகள் சென்னை TR கார்டனில் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

Vicky Donor Tamil Remake DhaaralaPrabhu Gets A New Update