நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் இந்த நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

சில தினங்களுக்கு முன் புரட்சி தளபதி விஷால் மற்றும் அவரது தந்தை அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின் ஆயுர்வேத மருந்துகள் உட்கொண்டு, கொரோனாவிலிருந்து மீண்டனர். 

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா சோதனை மேற்கொண்டார். 

கொரோனா சோதனை முடிவில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இச்செய்தி அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அவரது உடல் நிலை குறித்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பயப்பட தேவையில்லை. சிறிது காய்ச்சல் இருந்தது. நான் நலமாக உள்ளேன் என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

இந்த லாக்டவுனில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடலை பாடி வெளியிட்டார். மேலும் பாடகி ஜானகி அவர்களின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியவர்களை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தனது குரலால் ரசிகர்களை ஈர்த்த SPB விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர் இசை பிரியர்கள்.