இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் தல 59 படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் டைட்டில் நேர்கொண்ட பார்வை என நேற்று அறிவிக்கப்பட்டது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

Veteran Actor Delhi Ganesh Speaks About Thala Ajith In College Function About His Character

அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அசத்திவருகிறது.

Veteran Actor Delhi Ganesh Speaks About Thala Ajith In College Function About His Character

தற்போது விழா ஒன்றில் பேசிய பழம் பெரும் நடிகர் டெல்லி கணேஷ், தான் திருவனந்தபுரத்திலிருந்து ஹைதராபாத் படப்பிடிப்புக்கு சென்ற போது வக்கீல் கெட்டப்பில் இருந்தாராம் அஜித். டெல்லி கணேஷை கண்டவுடன் சார் என்று ஓடிவந்து கட்டி அனைத்தாராம். அப்போது டெல்லி நீ சாதிச்சுட்டே என்று மனசுக்குள்ளே நினைத்தாராம் டெல்லி கணேஷ்.