அஜித் நடிப்பில் உருவாகிவரும் தல 59 படத்தை சதுரங்கவேட்டை புகழ் இயக்குனர் H.வினோத் இயக்குகிறார். இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் யுவன் இசையமைக்கிறார். 

பிங்க் ரீமேக்கான இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், வித்யா பாலன் போன்ற நட்சத்திர பட்டாளமே தல அஜித்துடன் இணைந்து நடிக்கின்றனர்.

பிப்ரவரி 15-ம் தேதி ஹைதெராபாத்தில் துவங்கப்படும் படப்பிடிப்பில் தல அஜித் பங்கேற்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. இந்த ஷூட்டிங்கில் நடிகை வித்யா பாலனும் பங்கேற்க உள்ளதாக நெருங்கிய திரை வட்டாரங்கள் கூறியது.

Veteran Actor Delhi Ganesh Joins The Crew Of Thala 59 Featuring Ajithkumar in Lead

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், நடிகர் டெல்லி கணேஷ் படத்தில் இணைந்துள்ளார். இவரது ரோல் என்னவாக இருக்கும் என்ற தகவல்கள் படக்குழுவினர் தரப்பிலிருந்து வெளிவரவில்லை. இந்தியன் 2 படத்திலும் நடிகர் டெல்லி கணேஷ் உள்ளார் என்பது கூடுதல் தகவல்.