தமிழ் சினிமா வட்டாரத்தில் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் சீனு மோகன். வருஷம் பதினாறு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி தொடர்ந்து தளபதி, இறைவி மற்றும் மேடை நாடகங்கள் போன்றவற்றில் தனது சீரான நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர் நடிகர் சீனு மோகன்.   

தொலைக்காட்சி சீரியல், வெப் சீரிஸ் போன்றவற்றிலும் நடித்து வந்தார். எழுத்தாளர் கிரேசி மோகனின் ட்ராமா ட்ரூப்பில் 1979 துவங்கி நீண்ட காலம் இருந்தவர், இன்று காலை மாரடைப்பால் காலமானார்.   

இவரது உடல் சென்னை அண்ணாநகரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 29-ம் டிசம்பர் இறுதி சடங்கிற்கு நடக்கவிருப்பதாகவும் அவரது நெருங்கிய நண்பரான கிரேசி மோகன் முகநூலில் பதிவு செய்துள்ளார்.