பொதுவாக வெங்கட் பிரபு படம் என்றாலே பெரிய நட்சத்திர பட்டாளத்தையே வைத்திருப்பார்.அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பார்ட்டி.இந்தாண்டு வெளியாகவுள்ள முக்கியமான படங்களில் பார்ட்டியும் ஒன்று.பிரேம்ஜி அமரன் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

அம்மா கிரேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா,ஜெய்,சந்திரமௌலி,சத்யராஜ்,ஜெயராம், நாசர்,ரம்யா கிருஷ்ணன்,ரெஜினா , நிவேதா பெத்துராஜ்,சஞ்சிதா ஷெட்டி , என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் முதலில் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.பின்னர் தவிர்க்க முடியாத சில காரணங்களால் படம் தள்ளிப்போனது.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

படம் தள்ளிபோன பிறகு சரியான ரிலீஸ் தேதிக்காக படக்குழுவினர் காத்திருந்தனர்.தற்போது படக்குழுவினருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி , இந்த படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என தெரிகிறது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.