பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாகவும் தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமாகவும் ஜொலிக்கும் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் அஜித் நடித்த அதிரடி ஆக்ஷன் படமாக வெளிவந்த வலிமை பட ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் பாராட்டப்பட்டது.

இதனையடுத்து நேர்கொண்டபார்வை மற்றும் வலிமை படங்களைத் தொடர்ந்து மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் #AK61 திரைப்படத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் இயக்குனர் H.வினோத் இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் திரைப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக முதல்முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் #AK62 திரைப்படத்தில் அஜித்குமார் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும்  #AK62 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முழுக்க முழுக்க வெண் நிற தலை முடி மற்றும் தாடியுடன் அசத்தலான புதிய கெட்டப்பில் அஜித் குமார் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், தற்போது அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…