தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக பல ஃபேவரட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்விக்கும் ஜீவி பிரகாஷ் குமார் நடிகராகவும் தற்போது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஜீவி நடிப்பில் கடந்த டிசம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான பேச்சுலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. 

இதனையடுத்து கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் , ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும் செல்ஃபி திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான, இயக்குனர் மதி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள செல்ஃபி திரைப்படத்தின் அதிரடியான ட்ரைலரும் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

அடுத்ததாக அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ரெபெல் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.மேலும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்துள்ள இடிமுழக்கம் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

முன்னதாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்த ஜெயில் திரைப்படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. க்ரிக்கஸ் சினி க்ரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள ஜெயில் படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் ரேமண்ட் டெரிக் படத்தொகுப்பு செய்ய, ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

ஜெயில் படத்தில் அபர்ணிதி, ராதிகா சரத்குமார், பிரபாகர், யோகி பாபு, ரோபோ சங்கர், பசங்க பாண்டி மற்றும் ரவி மரியா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் ஜெயில் திரைப்படத்தின் புதிய SNEAK PEEK வீடியோ தற்போது வெளியானது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஜெயில் பட SNEAK PEEK வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.