தமிழ் திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜீவி பிரகாஷ் குமார் அடுத்ததாக அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ரெபெல் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.தொடர்ந்து ஜீவி பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன. 

முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்துள்ள இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான, இயக்குனர் மதி மாறன் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும் செல்ஃபி திரைப்படம் தயாராகி வருகிறது. 

இதனிடையே இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்த ஜெயில் திரைப்படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜெயில் படத்தில் அபர்ணிதி, ராதிகா சரத்குமார், பிரபாகர், யோகி பாபு, ரோபோ சங்கர், பசங்க பாண்டி மற்றும் ரவி மரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

க்ரிக்கஸ் சினி க்ரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள ஜெயில் படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் ரேமண்ட் டெரிக் படத்தொகுப்பு செய்ய, ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜெயில் திரைப்படத்தின் நகரோடி பாடலின் MAKING வீடியோ தற்போது வெளியானது. ஜீவி பிரகாஷின் நகரோடி பாடலின் MAKING வீடியோ இதோ...