ஜீ தமிழின் பிரபல தொடரில் நடிகை மாற்றம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | April 27, 2022 15:33 PM IST
மாடலாக தனது மீடியா பயணத்தை தொடங்கி சின்னத்திரையில் ஹீரோயினாக அசத்தி வருபவர் தேஜஸ்வினி கௌடா.கன்னட சீரியலில் ஹீரோயினாக நடித்து கவனம் ஈர்த்த இவர் அடுத்ததாக தெலுங்கில் ஒளிபரப்பான சீரியல் மூலம் தெலுங்கு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார் தேஜஸ்வினி கௌடா.இந்த தொடரில் இவரது நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது,இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.இந்த தொடர் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் தேஜஸ்வினி கௌடா.
இதனை தொடர்ந்து Care of Anausya என்ற தொடரில் நடித்து அசத்தி வருகிறார் தேஜஸ்வினி கௌடா.சில வாரங்களுக்கு முன் ஜீ தமிழில் ஒளிபரப்பை தொடங்கிய வித்யா நம்பர் 1 என்ற தொடரில் தேஜஸ்வினி ஹீரோயினாக நடித்துள்ளார்.புவி அரசு இந்த தொடரின் ஹீரோவாக சமீபத்தில் இணைந்து நடித்து வருகிறார்.
ரசிகர்களின் ஆதரவை பெற்று இந்த தொடர் வெற்றிகரமாக சென்று வருகிறது.ஹீரோவுக்கு தங்கையாக நடித்து வந்த நடிகை கிருபா சில காரணங்களால் விலகியுள்ளார் என்றும் இவருக்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை மதுமிதா இளையராஜா இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதுகுறித்த ப்ரோமோவை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளனர்.