தங்கலான்: "பா.ரஞ்சித் சாருக்கே பெரிய சர்ப்ரைஸ்!"- சீயான் விக்ரமின் அர்ப்பணிப்பு குறித்து மனம் திறந்த தயாரிப்பாளர் KEஞானவேல் ராஜா! வீடியோ உள்ளே

தங்கலான் சீயான் விக்ரமின் அர்ப்பணிப்பு குறித்து பேசிய KEஞானவேல் ராஜா,producer ke gnanavel raja about chiyaan vikram dedication in thangalaan | Galatta

ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் பா ரஞ்சித் சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாகி இருக்கும் தங்களான் திரைப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா வெளியீடாக உலகமெங்கும் மிகப் பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் வெளி வருகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் தங்கலான் படம் குறித்த நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், "தங்கலான் டீசரே பயங்கரமாக இருந்தது உலக அளவில் அங்கீகாரம் கிடைப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருப்பது போன்று தெரிகிறது... முக்கியமாக சீயான் விக்ரம் - இயக்குனர் பா.ரஞ்சித் காம்போ மிகவும் பயங்கரமாக இருக்கிறது... எப்படி பார்க்கிறீர்கள்?" என கேட்டபோது, 

“நான் தயாரிக்கிற எந்த படத்தினுடைய கதையும் எனக்கு தெரியாது. எனக்கு அதிகபட்சம் என்ன தெரியும் என்றால் பீரியட் படம் என்றால் பீரியட் படம் அவ்வளவுதான் தெரியும். கதையெல்லாம் கேட்பதில்லை இயக்குனர் மீது இருக்கும் நம்பிக்கையில் தான் படம் பண்ணுகிறேன். எனக்கு சர்ப்ரைஸ் என்னவென்றால் விக்ரம் சாருடைய உழைப்புதான்... அந்த உடை அணிந்து நிற்பதற்கே ஒரு நடிகருக்கு தனி தைரியம் வேண்டும். ஏனென்றால் அவர் அந்த உருவமாகவே மாறி, இயக்குனர் பா.ரஞ்சித் அந்த காலகட்டத்தில் மக்கள் எப்படி இருந்தார்கள் அவர்களுடைய ஹேர் ஸ்டைல் எப்படி இருந்தது என்றெல்லாம் ஒரு போட்டோ ரெஃபரன்ஸ் கொடுத்து இருந்தார். ஆனால் அதற்கு மேல் அதில் நிறைய ஹோம் வொர்க் செய்து வித்தியாசமான ஸ்டைல்கள் முயற்சி செய்து, இந்த மாதிரி வந்து நிற்பார் என்பது ரஞ்சித் சாருக்கே ஒரு பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. அவ்வளவு கடினமான உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை. அந்த வகையில் இந்த படம், அவருடைய கடின உழைப்பை சரியான இடத்தில் முதலீடு செய்திருக்கிறார் என எனக்கு தோணுகிறது. எல்லா படங்களுக்குமே அவர் முழு உழைப்பை தான் கொடுக்கிறார். ஆனால் இந்த படத்தைப் பொறுத்தவரை சரியாக எந்த இடத்தில் உழைப்பை கொடுக்க வேண்டுமோ அந்த இடத்தில் கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் கண்டிப்பாக அவரது திரை பயணத்தில் தங்கலான் ஒரு பெரிய மைல் கல்லாக இருக்கும்.” என்றார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம். 

 

1800 களின் காலகட்டத்தில் கேஜிஎப் கதை காலத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மிரட்டலான பீரியட் ஆக்சன் திரைப்படமாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் உருவாக்கி இருக்கும் இந்த தங்கலான் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் முதல் பாடல் மற்றும் டிரைலர் உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளிவரும் என்றும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.