லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்துவருகிறார் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த நடிகர் சிம்பு.     

அத்தாரிண்டிகி தாரேதி எனும் தெலுங்கு படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் சிம்புவுடன் மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, வம்சி கிருஷ்ணா, மஹத், யோகி பாபு மற்றும் ரோபோ ஷங்கர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.   

தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் கலக்கி வருகிறது. சிம்புவின் மாஸான வசனங்கள் பட்டையை கிளப்பி வருகிறது.