பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த முன்னணி இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடிகராகவும் தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து தமிழ் படம் படத்தின் இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக தயாராகி வரும் ரத்தம் படத்தில் நடித்து வரும் விஜய் ஆன்டனியின் நடிப்பில்  தமிழரசன், காக்கி மற்றும் அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்களும் நிறைவடைந்து விரைவில் ரிலீஸாக தயாராகி வருகின்றன

முன்னதாக இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் விஜய் ஆண்டனி முதல் முறை இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் பிச்சைக்காரன் 2. இயக்குனர் சசி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 திரைப்படம் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிக்கிறார்.

ஓம் நாராயண் ஒளிப்பதிவில், லியோ ஜான்பால் படத்தொகுப்பு செய்யும் பிச்சைக்காரன் 2 படத்திலிருந்து ANTI BIKILI எனும் புதிய போஸ்டர் என சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன நிலையில் தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ANTI BIKILI தீம் பாடல் வருகிற மார்ச் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.