விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது. இப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார் என்ற பேச்சு போய் கொண்டிருந்தது. இதற்கிடையே சில காரணங்களால் நடிகர் மாதவனே இப்படத்தை முழுவதும் இயக்கி வருகிறார். 

Update On Rocketry The Nambi Effect Madhavan To Play A Rocket Scientist In Biopic

அச்சு அசலாக நம்பி நாராயணனாகவே மாறியிருக்கிறார் நடிகர் மாதவன். சாக்லேட் பாய் கேரக்டர் மட்டுமல்லாமல் தனது நடிப்பின் அளவை பட்டைதீட்டும் நடிகர் மாதவனின் இம்முயற்ச்சி பாராட்டிக்குரியதாகும். சமீபத்தில் நம்பி நாராயணன் ரோலுக்காக மாதவன் மேற்கொண்ட மேக்கப் மற்றும் உடல் அமைப்பு மாற்றம் குறித்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார் மாதவன். நடிகர் சூர்யா படத்தில் முக்கிய ரோலில் வருவார் என்ற செய்தியும் வெளியாகியது.

Update On Rocketry The Nambi Effect Madhavan To Play A Rocket Scientist In Biopic

தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை செர்பியாவில் படமாக்கவுள்ளதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் மாதவன்.

Update On Rocketry The Nambi Effect Madhavan To Play A Rocket Scientist In Biopic