கனவுகளை துரத்தும் சராசரி மனிதனாய் நுழைந்து, இன்று உலகளவில் சிறந்த நடிகராக உயர்ந்து நிற்கும் நடிகர் மாதவன் குறித்த பதிவு தான் இது. சாக்லேட் பாய் மாதவனை அனைவரும் அறிவர். மாதவன் பற்றி நீங்கள் அறிந்திடாத சில தகவல் இதோ ...

Unknown Facts About Actor Madhavan Aka Maddy On His Birthday

தனது வாழ்க்கையை தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் ஆரம்பித்த மாதவன், Banegi Apni Baat எனும் தொடரில் நடிக்கத்துவங்கினார். Sea Hawks எனும் தொடரில் கப்பல் கேப்டனாக நடித்த போதே பிரபலமானார். பின்பு Tol Mol Ke Bol-ல் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்தார்.

கல்வியில் சிறந்து விளங்கிய மாதவன் ஓர் எலெக்ட்ரோனிக்ஸ் பட்டதாரி. இந்தியா-கனடா கலாச்சார தூதராக திகழ்ந்துள்ளார். 1992-ம் ஆண்டு ஜப்பானில் நடந்த பிஸ்னஸ் கான்பெரென்ஸில் பங்கேற்று சிறுவயதிலே பப்ளிக் ஸ்பீக்கராக விளங்கியவர்.

Unknown Facts About Actor Madhavan Aka Maddy On His Birthday

மாதவனின் முக்கிய கனவு ராணுவத்தில் சேர்வது. அந்த ஆசை நிறைவேறாததால், ஆசிரியராக மாறினார். மஹாராஷ்ட்ராவின் சிறந்த NCC கேடட் எனும் பெயர் பெற்றவர் நம் மேடி.

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் மாதவன் மிகச்சிறந்த கோல்ஃப் பிளேயர் என்று.. 2007-ம் ஆண்டு செலிபிரிட்டி சேரிட்டி ஈவென்ட்டில் நடிகர் அமிதாப் மற்றும் மணிரத்னமுடன் சேர்ந்து விளையாடியுள்ளார்.

2006-ம் ஆண்டு PETA நடத்திய ஆன்லைன் கருத்து கணிப்பில் வென்ற பெருமையும் சேரும். தொண்டு நிறுவங்களுக்கு உதவி செய்யும் மாமனிதராக இருந்துள்ளார். ஏன் மணிரத்னம் நடத்திய நேற்று இன்று நாளை தொண்டு நிகழ்ச்சியிலும் நடித்து தந்துள்ளார்.

Unknown Facts About Actor Madhavan Aka Maddy On His Birthday

Paradox ஸ்டுடியோஸ் இரண்டு வீடியோ கேம் விளையாட்டில் மாதவன் உருவம் கொண்டு வடிவமைத்து கௌரப்படுத்தியது. மணிரத்னமின் அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த மாதவனின் பிறந்தநாளன்று அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது கலாட்டா.