நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து திரை வரலாறாக விளங்கும் படம் தேவர் மகன். இயக்குனர் பரதன் இயக்கிய இப்படம் வெளியாகி கிட்ட தட்ட 26 வருடங்கள் ஆயிற்று. இன்னும் இந்த படம் சினிமா விரும்பிகள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறது. 

இசைஞானி இசையமைத்திருந்த இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருப்பார். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர அதிகம் வாய்ப்பு உள்ளது என்று கமல் கூறியிருந்தார். 

அரசியல் மற்றும் இந்தியன் 2 படப்பிடிப்பு என ஓயாமல் பணி செய்து வரும் இந்நிலையில், தேவர் மகன் படம் எடுக்கப்பட்ட இடமான பொள்ளாச்சி அரண்மனைக்கு நேரில் சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா ? என்ற கேள்வியில் உள்ளனர் கமல் ஹாசன் ரசிகர்கள்.