ராகவா லாரன்ஸின் அதிரடி ஆக்ஷனில் வரும் ருத்ரன்... இசை வெளியீட்டு விழா குறித்த ருசிகர தகவல் இதோ!

ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட இசை வெளியீட்டு விழா குறித்த ருசிகர தகவல்,raghava lawrence in rudhran movie audio launch plans | Galatta

நடன கலைஞராக தனது திரை பயணத்தை தொடங்கி தனக்கே உரித்தான ஸ்டைலான நடனத்தால் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வருபவர் ராகவா லாரன்ஸ். அதிலும் லாரன்ஸ் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படங்கள் தென்னிந்திய சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தன. குறிப்பாக பல தரப்பு ரசிகர்களும் விரும்பக் கூடிய ஹாரர் காமெடி வகை படங்களில் ராகவா லாரன்ஸ் முதன் முதலில் இயக்கிய நடித்த முனி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளிவந்த காஞ்சனா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூல் வேட்டை நடத்தியது. பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட காஞ்சனா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக லக்ஷ்மி படத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க ராகவா லாரன்ஸ் இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2 மற்றும் 3 ஆகிய பாகங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன. இந்த காஞ்சனா சீரிஸ் படங்களும் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. இந்த சீரிஸின் அடுத்த படைப்பாக காஞ்சனா படத்தின் நான்காவது பாகமாக துர்கா திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. துர்கா படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு சகோதரர்கள் இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அன்பறிவு சகோதரர்கள் விலகியுள்ளதால் யார் இயக்குகிறார் என்பது குறித்த இதர அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இயக்குனர் P.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் தற்போது லாரன்ஸ் நடித்து வருகிறார்.

அதேபோல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து பெரும் வெற்றி பெற்ற ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக சமீபத்தில் தொடங்கப்பட்ட ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் SJ.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் தயாரிப்பிலும் திரைக்கதையிலும், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் அதிகாரம் திரைப்படத்தில் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வரிசையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகியுள்ள திரைப்படம் ருத்ரன். இயக்குனராக களமிறங்கி இருக்கும் FIVE STAR CREATIONS LLP நிறுவனத்தின் தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ருத்ரன் திரைப்படத்திற்கு RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ருத்ரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் லாரன்ஸின் ருத்ரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
 

சினிமா

"ஆஸ்கார் மேடையில் RRR கொண்டாட்டம்!"- ரசிகர்களை உற்சாகப்படுத்திய அசத்தலான அறிவிப்பு இதோ!

ரிலீஸுக்கு ரெடியான ஜெயம் ரவியின் அகிலன்... சென்சார் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
சினிமா

ரிலீஸுக்கு ரெடியான ஜெயம் ரவியின் அகிலன்... சென்சார் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!

சிலம்பரசன்TR ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்... பத்து தல பட குழுவின் அதிரடி அறிவிப்பு இதோ!
சினிமா

சிலம்பரசன்TR ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்... பத்து தல பட குழுவின் அதிரடி அறிவிப்பு இதோ!