"4 வருடங்களைக்குப் பின் வெள்ளித்திரையில் அனுஷ்கா மாஸ் கம்பேக்... புதிய பட டைட்டில் - ஃபர்ஸ்ட் லுக் இதோ!

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட ஃபர்ஸ்ட் லுக்,anushka shetty new movie miss shetty mr polishetty movie first look | Galatta

இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் நடிகை அனுஷ்கா தெலுங்கில் சூப்பர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். பின்னர் பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலியின் விக்ரமர்குடு படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடைய மிகப் பிரபலமடைந்தார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான விக்ரமர்குடு திரைப்படம் தான் தமிழில் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த சிறுத்தை படமாக ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரெண்டு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கிய நடிகை அனுஷ்கா தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நாயகர்களுடன் இணைந்து நடித்து நட்சத்திர கதாநாயகியாக உயர்ந்தார்.

மேலும் கதாநாயகியை முன்னிறுத்திய திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை அனுஷ்காவின் திரை பயணத்தில் மைல்கல்லாக அமைந்த திரைப்படம் அருந்ததி. பக்கா ஆக்ஷன் ஃபேண்டஸி திரைப்படமாக வெளிவந்த அருந்ததி திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி அனுஷ்காவை இந்திய அளவில் மிகப்பெரிய கதாநாயகியாக உயர்த்தியது. தமிழில் தளபதி விஜயுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் 1,2&3 , சீயான் விக்ரமுடன் தெய்வத்திருமகள் மற்றும் தாண்டவம், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லிங்கா, அஜித் குமார் உடன் என்னை அறிந்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக கலக்கினார் அனுஷ்கா.

மறுபுறம் அருந்ததி படம் போலவே பஞ்சாக்ஷ்ரி, சந்திரமுகியின் தெலுங்கு வெர்ஷனாக நாகவல்லி, ருத்ர மாதேவி ஆகிய படங்களில் நடித்த அனுஷ்கா இந்திய சினிமாவின் மாபெரும் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களாக எப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாகுபலி 1&2 திரைப்படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார். கடைசியாக அனுஷ்கா நடித்த பாகமதி திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீசானது. தொடர்ந்து மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடித்த நிசப்தம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. 

இதனிடையே கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது அனுஷ்காவின் புதிய திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு அனுஷ்கா 48 என ஆரம்பத்தில் பெயரிடப்பட்டது. 2021 ஆம் ஆண்டு அனுஷ்கா 48 திரைப்படம் அறிவிக்கப்பட்டது. இயக்குனர் மகேஷ் பாபு.P இயக்கத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ஸ்ரீ சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா மற்றும் ஜாதி ரத்தினலு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரதன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு வருட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் நடிகை அனுஷ்காவின் இத்திரைப்படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் நீண்ட காலமாக ஆவலோடு காத்திருந்த நிலையில், காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வெளியானது அந்த அசத்தலான அறிவிப்பு. அனுஷ்காவின் 48 திரைப்படத்திற்கு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியானது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Introducing #MissShettyMrPolishetty to you all🤩

Get ready for a Rollercoaster ride of Entertainment this Summer 😍@NaveenPolishety @filmymahesh @radhanmusic #NiravShah #RajeevanNambiar #KotagiriVenkateswararao @UV_Creations @adityamusic pic.twitter.com/sRJfaYVBvW

— Anushka Shetty (@MsAnushkaShetty) March 1, 2023

சினிமா

"சந்திரமுகி 2 படத்திற்காக பிரம்மிக்க வைக்கும் லுக்கில் கங்கனா ரனாவத்!"- அட்டகாசமான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!

ராகவா லாரன்ஸின் அதிரடி ஆக்ஷனில் வரும் ருத்ரன்... இசை வெளியீட்டு விழா குறித்த ருசிகர தகவல் இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸின் அதிரடி ஆக்ஷனில் வரும் ருத்ரன்... இசை வெளியீட்டு விழா குறித்த ருசிகர தகவல் இதோ!

சினிமா

"ஆட்ட நாயகன் தளபதி விஜயின் வாரிசு பட 50வது நாள் கொண்டாட்டம்!"- லியோ தயாரிப்பாளரின் செம்ம மாஸ் பதிவு இதோ!