ஒட்டு மொத்த இந்திய திரை உலகமும் தலையில் வைத்துக் கொண்டாடும் ஒரு கலைஞன் உலக நாயகன் கமல்ஹாசன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு புதிய உத்தியையும் தொழில்நுட்பத்தையும் புது முயற்சியும் புகுத்துவதில் உலக நாயகனுக்கு ஈடு இணை உலகநாயகன் மட்டுமே. 

ரசிகர்களோடு எப்போதுமே இணக்கமான உறவில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றினார். மேலும் ரத்ததானம், உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட பலவிதமான சமூக சேவைகளில் ஈடுபடுவதையும் ஊக்குவித்தார். அந்த வகையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு தற்போது இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன். 

மூளை புற்று நோய் ஸ்டேஜ் 3 பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் சாகேத் என்ற ரசிகரை ZOOM வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ரசிகர் உடனும் அவரது குடும்பத்தாருடனும் கலந்துரையாடி புற்றுநோயிலிருந்து மீண்டு வர ஊக்குவிக்கும் விதமாக பேசியிருக்கிறார்.
 
கமல்ஹாசனை வீடியோ காலில் பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற ரசிகர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இடையிலான இந்த நெகிழ்ச்சியான கலகலப்பான உரையாடல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.