வெற்றிமாறன் - சூரி - விஜய் சேதுபதியின் விடுதலை பாகம்1 பட ஸ்பெஷல் ட்ரீட்... சர்ப்ரைஸாக வந்த காட்டுமல்லி வீடியோ பாடல் இதோ!

வெற்றிமாறனின் விடுதலை பட காட்டுமல்லி வீடியோ பாடல் வெளியீடு,vetrimaaran soori vijay sethupathi in viduthalai part 1 kaattumalli video song | Galatta

ஒட்டு மொத்த இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் வகையில் தொடர்ந்து தரமான திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பல வளரும் இயக்குனர்களுக்கு முன் உதாரணமாகவும் ஆகச்சிறந்த இயக்குனராகவும் திகழ்பவர் இயக்குனர் வெற்றிமாறன். அந்த வகையில் அடுத்த சிறந்த படைப்பாக முதல்முறையாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கலைப்புலி.S.தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகும் இந்த வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், வெகு விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் வடசென்னை திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் தொடங்கும் என சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகிய திரைப்படம் விடுதலை. RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்க, பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரியும், பெருமாள் வாத்தியார் எனும் முன்னணி கதாப்பாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர். R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், R.ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ள விடுதலை திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசான விடுதலை பாகம் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் காட்சியான அந்த ரயில் விபத்து காட்சி ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஆரம்பத்திலேயே பிரமிக்க வைத்தது. அந்தப் பிரம்மிப்பும் தாக்கமும் படத்தின் இறுதிவரை இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். நகைச்சுவை நடிகராக இத்தனை நாட்கள் நம்மை மகிழ்வித்து வந்த நடிகர் சூரி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சேர்ந்த நடிகராக அசத்தியிருக்கிறார். அதேபோல் இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த இரண்டு பாடல்களும் அது படமாக்கப்பட்ட விதமும் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. இந்நிலையில் விடுதலை பாகம் 1 படத்தின் காட்டு மல்லி வீடியோ பாடல் தற்போது வெளியானது. அந்த வீடியோ பாடல் இதோ…
 

சினிமாக்காரன், சிலோன்காரன்னு சொல்லி வீடு தரல... தனது வாழ்க்கையின் போராட்டங்கள் குறித்து மனம் திறந்த போண்டாமணி!
சினிமா

சினிமாக்காரன், சிலோன்காரன்னு சொல்லி வீடு தரல... தனது வாழ்க்கையின் போராட்டங்கள் குறித்து மனம் திறந்த போண்டாமணி!

'முனி, காஞ்சனா என ஹாரர் காமெடி படங்களை எடுக்க காரணம் என்ன?'- உண்மையை உடைத்த ராகவா லாரன்ஸின் ஸ்பெஷல் பேட்டி இதோ!
சினிமா

'முனி, காஞ்சனா என ஹாரர் காமெடி படங்களை எடுக்க காரணம் என்ன?'- உண்மையை உடைத்த ராகவா லாரன்ஸின் ஸ்பெஷல் பேட்டி இதோ!

சூர்யாவின் பிரம்மாண்டமான கங்குவா பட மிரட்டலான ஆக்ஷன் ஆரம்பம்... அதிரடியாக வந்த ஸ்பெஷல் அறிவிப்பு இதோ!
சினிமா

சூர்யாவின் பிரம்மாண்டமான கங்குவா பட மிரட்டலான ஆக்ஷன் ஆரம்பம்... அதிரடியாக வந்த ஸ்பெஷல் அறிவிப்பு இதோ!