பின்னாடி இருந்து படக்குனு புடிச்சு இழுத்தா என்ன ஆவோம்?- கோபமூட்டிய விஷயங்களுக்கும் கலகலப்பாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!

கோபமூட்டிய விஷயங்களுக்கு கலகலப்பாக பதிலளித்த விக்னேஷ் சிவன்,vignesh shivan shared about youtube thumbnails | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, தனது அடுத்த படமாக நானும் ரவுடி தான் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனை அடுத்து தனது அடுத்த படத்தில் அஜித் குமாருடன் இணைய இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்த நிலையில், சமீபத்தில் அத்திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கோமாளி மற்றும் லவ் டுடே படங்களின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன்இயக்க  இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற விக்னேஷ் சிவன் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், சமீபத்தில் தனது மனைவியும் நடிகையுமான நயன்தாராவுடன் தனது குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு ரயிலில் பயணம் செய்த போது நயன்தாரா கோபமடைந்தார் என குறிப்பிடும் வகையில் பல வீடியோக்களில் நயன்தாரா கோபமாக இருக்கும் புகைப்படத்தோடு THUMBNAIL இடப்பட்டது. இது குறித்து சமூக வலைதளங்களில் பரவும் TROLLகள் குறித்தும் YOUTUBE வீடியோக்களில் பயன்படுத்தப்படும் தலைப்புகள் மற்றும் அதன் THUMBNAILகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் குறித்தும் பேசிய போது, 

“இப்போது பாருங்கள் பின்னாடி இருந்து பிடித்து படக்கென்று இழுத்தார்கள் என்றால் நாம் என்ன ஆவோம். பின்னாடி இருந்து இப்படி சட்டையை பிடித்துவிட்டார்கள், பிடித்து இழுத்தால் அந்த சமயத்தில் சிரித்துக் கொண்டே "என்ன இவ்வளவு செம்மையாக பிடித்து இருக்கிறீர்கள்... எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு… இதே மாதிரி இந்த பக்கமும் பிடியுங்கள்", என்றா சொல்ல முடியும். யாராக இருந்தாலும் அது ஒரு ஹீரோயினாக இருந்தால் என்ன சாதாரண நபராக இருந்தால் என்ன யாராக இருந்தாலுமே என்ன ஏது என்று திரும்பிப் பார்த்தாலே... இது அவர்களுடைய உடம்பு அவர்களுடைய துணி… நாம் தானே நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும் அந்த நேரத்தில் வேறு எப்படி நாம் ரியாக்ட் பண்ண முடியும். ஆனால் அது வந்து அப்படி காட்டப்படுகிறது. இந்த THUMBNAIL என்பது அவர்களுக்கு தேவைப்படுகிறது. எதை கிளிக் செய்தால் எதை பார்ப்பார்கள்… மக்களும் அதைத்தான் விரும்பி பார்க்கிறார்கள் எனும் போது அதை உருவாக்குபவர்களை நாம் எதுவும் சொல்ல முடியாது" என இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த முழு பேட்டி இதோ… 
 

வெற்றிமாறன் - சூரி - விஜய் சேதுபதியின் விடுதலை பாகம்1 பட ஸ்பெஷல் ட்ரீட்... சர்ப்ரைஸாக வந்த காட்டுமல்லி வீடியோ பாடல் இதோ!
சினிமா

வெற்றிமாறன் - சூரி - விஜய் சேதுபதியின் விடுதலை பாகம்1 பட ஸ்பெஷல் ட்ரீட்... சர்ப்ரைஸாக வந்த காட்டுமல்லி வீடியோ பாடல் இதோ!

'தளபதி விஜய்க்கு தம்பியாக நடிக்க வேண்டியது, ஆனால்..!'- அழகி பட நடிகர் சதீஷ் ஸ்டீபனின் ஸ்பெஷல் பேட்டி இதோ!
சினிமா

'தளபதி விஜய்க்கு தம்பியாக நடிக்க வேண்டியது, ஆனால்..!'- அழகி பட நடிகர் சதீஷ் ஸ்டீபனின் ஸ்பெஷல் பேட்டி இதோ!

பொன்னியின் செல்வன் 2 க்ளைமேக்ஸின் HINT கொடுத்த படக்குழு... கவனத்தை ஈர்க்கும் அசத்தலான புதிய போஸ்டர் இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 க்ளைமேக்ஸின் HINT கொடுத்த படக்குழு... கவனத்தை ஈர்க்கும் அசத்தலான புதிய போஸ்டர் இதோ!