"ஏன் பாண்டியர்களை காட்டுமிராண்டிகளாக காட்டுகிறீர்கள்?" ரசிகரின் கேள்விக்கு இயக்குனரின் பதில்.. - முழு நேர்காணல் இதோ..

பாண்டியர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த யாத்திசை இயக்குனர் விவரம் இதோ - Yaathisai director answered fans questions | Galatta

தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக வந்த வரலாற்று புனைவு கதைகளில் பாண்டிய மன்னர்களையும் பாண்டிய நில மக்களையும் தவறுதலாகவோ அல்லது கதைக்கு எதிர்மறையாகவும் சித்தரித்து வருகின்றனர். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம், மணிரத்னம் இயக்கிய கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் வரை. பாண்டியர்கள் சார்ந்த திரைப்படங்கள் சிவாஜி காலங்களுக்கு பின் தமிழில் பெரிதாக எதுவும் வரவில்லை. இந்த நிலையில் பாண்டிய நில மக்களையும் எயினர்களின் வாழ்வயுயலையும் கதைக்களமாக கொண்டு இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் ‘யாத்திசை’ இப்படத்தின் மிரட்டலான முன்னோட்டம் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் இந்த படத்திலும் பாண்டியர்களை காட்டுமிராண்டிகளாக காட்டுகிறார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் யாத்திசை படம் குறித்து நமது கலாட்டா தமிழ் மீடியா சிறப்பு பேட்டியில் படக்குழுவினர் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதில் ஒரு பிரிவாக படத்தின் இயக்குனர் தரணி ராசேந்திரன் தொலைபேசி வாயிலாக ரசிகர்களின் கருதுக்கள், விமர்சனங்களுக்கு பதிலளித்தார். அதில், படத்தில் தமிழில் பேசுவதற்கு தமிழில் சப்டைட்டில் என்ற விமர்சனத்திற்கு, "நம்ம சங்க மொழி. நம்மகிட்ட இப்போ அந்த வார்த்தைகளெல்லாம் இல்லை. அதை மீட்டுருவாக்கம் பன்றா மாதிரியான முயற்சிதான் இது. அதை சினிமாவாக எடுக்க அந்த காலக்கட்டத்தை உருவாக்க அந்த மொழி தேவை படுகிறது. அதனால் நாங்க பயன்படுத்திருக்கோம். எல்லாவற்றிருக்கும் மேல் படம் புரிய வேண்டும் என்ற தேவை வந்துடுச்சு" என்றார்.பின் பாகுபலி படம் அளவு பட்ஜெட் இருந்திருந்தால் உலகத்தரத்திற்கு மேல் இந்த படம் வந்திருக்கும் என்ற கருத்திற்கு, " அடுத்தடுத்த முயற்சிகளில் இது சாத்தியமாகுமா என்பதையே பார்க்க வேண்டும்" என்றார் இயக்குனர். பின் பொன்னியின் செல்வன் மணிரத்தினம் பதில் இந்த இயக்குனர் எடுத்திருக்கலாம் என்ற கருத்திற்கு, "இது கொண்டாட்டத்தின் மனநிலையாக தான். அடுத்தடுத்த வாய்ப்பு கிடைத்தால் நிறைய விஷயம் முயற்சி செய்யலாம்" என்றார். மேலும் எல்லா படங்களிலும் பாண்டியர்கள்  ஏன் காட்டுமிராண்டிகளாக சித்தரிக்கப்படுகிறாரகள்? என்ற கேள்விக்கு இயக்குனர், "படம் பார்த்தால் அதற்கான தெளிவு கிடைத்து விடும். பாண்டியர்களை நாங்கள் காட்டுமிராண்டிகளாக காட்டவில்லை. அதில் வருபவர்கள் நாடோடி சமூகம். போரினால் வீழ்ந்த சமூகம். முறையான வாழ்வாதாரம் இல்லாததனால் அப்படி இருக்கிறார்கள். படம் பார்த்தா புரிந்து விடும்" என்றார் இயக்குனர் தரணி ராசேந்திரன்

மேலும் யாத்திசை படக்குழுவினர் படம் குறித்து பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

 “Skin Dress லாம் பயன்படுத்தல..” யாத்திசை படக்குழுவினர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்.. – சிறப்பு நேர்காணல் இதோ..
சினிமா

“Skin Dress லாம் பயன்படுத்தல..” யாத்திசை படக்குழுவினர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்.. – சிறப்பு நேர்காணல் இதோ..

“CM கிட்ட Once More கேட்டேன்.. ரஜினி சார் Surprise Call”.. விக்னேஷ் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்.. – முழு நேர்காணல் இதோ..
சினிமா

“CM கிட்ட Once More கேட்டேன்.. ரஜினி சார் Surprise Call”.. விக்னேஷ் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்.. – முழு நேர்காணல் இதோ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை.. செக் வைத்த ட்விட்டர் நிறுவனம்..! பின்னணி என்ன? - ப்ளு டிக் இழந்தவர்களின் பட்டியல் இதோ..
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை.. செக் வைத்த ட்விட்டர் நிறுவனம்..! பின்னணி என்ன? - ப்ளு டிக் இழந்தவர்களின் பட்டியல் இதோ..