தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகருமான வருண் நடித்த திரைப்படம் ஜோஸ்வா இமைபோல் காக்க.

பிரபல இளம் கதாநாயகரான நடிகர் வருண் ஜெயம் ரவி நடித்த போகன், வனமகன், கோமாளி மற்றும் ஜீவாவின் சீறு,  RJ பாலாஜியின் LKG உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் பப்பி திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளராக சிறப்பாக விளையாடினார் . 

கொதம் மேனனின் ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தில் கதாநாயகியாக ராஹேய் நடிக்க, நடிகர் கிருஷ்ணா,திவ்ய தர்ஷினி (DD) மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் அவர்கள் தயாரித்துள்ள ஜோஷ்வா இமைபோல் காக்க படத்திற்கு S.R.கதிர் ஒளிப்பதிவில் கார்த்திக் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்கள் நமது கலாட்டா சேனலுக்கு சமீபத்தில் அளித்த பிரத்யேக பேட்டியில் படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்.  அதில், “ஜோஷ்வா திரைப்படம் முற்றிலும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. காதலர்தின வெளியீடாக (பிப்ரவரி 14ஆம் தேதி) படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தோம். ஆனால், கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் 50% இருக்கைகள் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படத்தை OTT தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். பிப்ரவரி இறுதிக்குள் படம் கட்டாயம் ரிலீஸாகும். ஜோஷ்வா படம் லவ் & ஆக்ஷன் படமாக ஹாலிவுட் தரத்தில் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.