தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். பீஸ்ட் திரைப்படம் இந்த ஆண்டு கோடை வெளியீடாக ரிலீசாக உள்ளது. முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளிவந்து மெகா ஹிட் ஆனது.

தளபதி விஜய்யுடன் இணைந்து மிரட்டலான வில்லனாக சேதுபதி நடிக்க, ஆன்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, சிபி, அர்ஜுன் தாஸ் மற்றும் தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரத்தில் இளம்வயது பவானி ஆக நடித்த மாஸ்டர் மகேந்திரன் தனது பிறந்தநாளான இன்று (ஐனவரி 23) மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்புத் தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. அந்தப் புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க  கரா, அமிகோ கரேஜ் மற்றும் ரிப்பப்பரி ஆகியப் படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.