தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த நடிகைகள் சிலரில் த்ரிஷாவும்,சிம்ரனும் முக்கியமானவர்கள்.கடந்த மாதம் வெளியான சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக இருவரும் நடித்திருந்தனர்.ஆனாலும் இவர்கள் இருவரையும் இணைந்து பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.

தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் ரம்,கொரில்லா படங்களை தயாரித்த All In Pictures தயாரிக்கும் அடுத்த படத்தில் சிம்ரன்,த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தை அறிமுக இயக்குனர் சுமந்த் இயக்குவார் என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன.

ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் ,தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் த்ரிஷா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த செய்தியை அடுத்து சிம்ரன்,த்ரிஷா இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.