சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் சர்கார் திரைப்படம் ஆளும் அரசுக்கு எதிரான காட்சிகளையும், வசனங்களையும் கொண்டு இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியது.   

மேலும் திரையரங்குகளில் உள்ள பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். மேலும் சர்ச்சை குரிய காட்சிகளை நீக்குமாறும் வலியுறுத்தினர். 

TN Ministers Appreciates Billa Pandi Starring RKSuresh In Lead  

தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜு பில்லா பாண்டி படத்தைப் பார்த்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார். 

திரைப்பட ஆர்வலர்களே பெரிதும் ஆர்வம் காட்டாத ஒரு படத்துக்கு அமைச்சர் ஒருவர் பட ரிவ்யூ தந்திருப்பது இதுவே முதல் முறை. பில்லா பாண்டி படத்தைப் பார்த்து கடம்பூர் ராஜு கூறியதாவது, பில்லா பாண்டி படத்தைப் பார்த்தேன். எதார்த்தமான நடிப்பால் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.   

சிறந்த கதையம்சம் உள்ள படமாக நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தி இருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.