இளைய பிராட்டி குந்தவையின் சவால்.. ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த சர்ப்ரைஸ்.. - ஆர்வம் காட்டும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ இதோ..

திரிஷா கொடுத்த அகநக பாடல் போட்டி வைரல் வீடியோ இதோ -  Ponniyin Selvan Aganaga song Surprise contest for Fans | Galatta

இந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படம் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன். முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைய் பெற்று உலகளவில் விமர்சன அடிப்படையிலும் வசூல் அடிப்படையிலும் வரவேற்பை பெற்றது. ரவி வர்மன் ஒளிப்பதிவில் தோட்ட தாரணி கலை வடிவத்தை ரசிகர்களை ஆயிரமாயிரம் காலம் கடந்து கொண்டு சேர்த்திருப்பார்கள் நடிகர்கள் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, நாசர் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமுடன் லைகா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகியது. முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் 28 ம் தேதி உலகளவில் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான இறுதிகட்ட விளம்பர வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்திற்கான விளம்பர வேலை தொடங்கியுள்ளது. முன்னதாக ஏஆர் ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ள ‘அகநக’ பாடலின் லிரிக்கல் வீடியோ வைரலானது. இதனையடுத்து படத்தில் குந்தவி இளவரசியாய் நடித்த திரிஷா அவர்கள் அகநக பாடலை ரசிகர்கள் பாடி பதிவிடும் படி கேட்டுள்ளார். அனைத்து பாடல்களையும் தான் கேட்கவுள்ளதாகவும் சிறந்த பாடலுக்கு சர்ப்ரைஸ் பரிசு தரப்போவதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

#AgaNaga fans! This one is for you! Post your covers with #AgaNagaCoversContest! Looking forward to hearing all your versions! A special prize awaits!

#CholasAreBack #PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @LycaProductions @Tipsofficial @IMAX @primevideoIN @trishtrasherspic.twitter.com/qLOoK2zCsA

— Madras Talkies (@MadrasTalkies_) March 25, 2023

இதனையடுத்து இந்த வீடியோ ரசிகர்கள் அனைவராலும் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. தனித்துவமான விளம்பரங்கள் செய்து கடந்த ஆண்டு மனம் கவர்ந்த பொன்னியின் செல்வன் படக்குழு இந்த ஆண்டு இரண்டாம் பாகத்திற்கான விளம்பர வேலையை நிதானமாக செய்து வருகின்றனர்.

தமிழ் மொழியில் மிகப்பெரிய பொக்கிஷமான நாவலாக இருக்கும் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வரும் மார்ச் 29 ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிட்டதக்கது.

அமீர், யுவன் கூட்டணியில் புதிய படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அறிவிப்பு  இதோ..
சினிமா

அமீர், யுவன் கூட்டணியில் புதிய படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அறிவிப்பு இதோ..

கனா, நெஞ்சுக்கு நீதி இயக்குனர் அருண்ராஜா காமராஜின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு -  அட்டகாசமான டைட்டில் இதோ..
சினிமா

கனா, நெஞ்சுக்கு நீதி இயக்குனர் அருண்ராஜா காமராஜின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு - அட்டகாசமான டைட்டில் இதோ..

அஜித் குமாரின் தந்தை மறைவு ..நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய் – வைரல் வீடியோ இதோ..
சினிமா

அஜித் குமாரின் தந்தை மறைவு ..நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய் – வைரல் வீடியோ இதோ..